இதப் படிக்கற சாமியோ கும்புடுறனுங்க....
அட எங்க பக்கத்தூட்டு மாமாவும் சரி அண்ணா கசாறேவும் சரி அப்படி என்னத்த தான் நாடே லஞ்சத்தில மொதக்குது மொதக்குதுன்னு சொல்ராங்கன்னு பொட்டாட்ட ஊட்ல உக்காந்துட்டு யோசிட்டுகிட்டே இருப்பேன். ( ப்ளஷ்பக் ல கசாறே தாத்தாவ நெனச்சுக்குங்க)
ஈரோடு மாவட்டத்தில் என்னுடைய கிராமத்தில் நடந்தது.
ஊர் பேர வெளிய சொன்னா போட்டு தள்ளிட்டாங்கனா ???!!! அதனால யோசிச்சு அப்பறமா சொல்றேன் :)
(கீழ்ப்படி நிகழ்வு நடந்தது ஒரு மாதத்திற்கும் மேல்)
நேத்து காத்தால எம்பட அக்காட்ட சொல்லிட்டு இருந்தேன்.
"எம்படகிட்ட இதுவர யாருமே லஞ்சங்கேட்டதே இல்லன்னு" (நா ஏதாவது கவுருமென்டு ஆபீசுக்கு போயிருந்தாதானே அவங்க கேக்கறதுக்கு)
கிட்டத்தட்ட பத்து நாலா எங்க ஊட்டுக்கு தனியா கரண்டு சர்வீசு வாங்கறதுக்கு எல்லா வேலையும் செஞ்சிட்டு இருந்தோம்.
இன்னிக்கு காத்தால என்னய கரண்டு ஆபிசுக்கு போயி சர்வீசு வாங்க apply பண்ணிட்டு பணமும் கட்டிட்டு வானு சொன்னாங்க. (எப்படா வீட்ட உட்டு வெளிய போவோம்னு எம்பிகிட்டு நிப்பேன் நான், கேக்கவா வேனும்).. சரின்னு கெளம்பி போனேன்.
என் மூஞ்சிலேயே எழுதி ஒட்டி வெச்சுட்டான் இந்த லூஸ் கடவுள். என்ன எழுதி ஒட்டி வெச்சுட்டான்னு கேக்கறிங்களா ??? அதாங்க "லூசுன்னு" ஒட்டி வெச்சுட்டான். பேக்கு பேக்குன்னு ஆபிசுக்குள்ள போனேன், எங்க ஊரு லையின் மேன் வந்தாரு. சிரிச்சு உபசரிச்சு, உக்கார சொன்னாரு. கவருமெண்டு ஆபீசுக்கு போனா இப்பிடி VIP போல மரியாதை கெடைக்கும்னு தெரீல. நல்லா உபசரிக்கராங்கனு சந்தோசப்ப்பட்டுகிட்டு உக்காந்துட்டு இருந்தேன்.
கண்ணுக்கு நேரா கொட்ட கொட்ட எழுதில "லஞ்ச விழிப்பு அலுவலகத்தின் முகவரியை போர்டு போட்டு வச்சிருந்தாங்க. (கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெலவிய தூக்கி ஏன் மனைல வச்சாங்க)
உள்ள போயிட்டு வந்த லையின் மேன் என்னய வெளிய கூபிட்டாரு. நானும் பேக்கு பேக்குன்னு போனேன். "ஒரு 300, 400 சேர்த்துக் கட்டிடுங்க, ஆபீசுல AE கு, லொட்டுகு, லொசுக்குக்கு ன்னு சொன்னாரு. (யாரு ஊட்டுக் காச இவ்ளோ உரிமையா கேக்கறாரு இவரு?). அவரு சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டு மறுபடியும் உள்ள போயி காத்திருந்தேன்.
AE கூப்பிட்டாரு. உள்ள போனேன். விண்ணப்பத்தை எல்லாம் சரி பார்த்திட்டு பணம் கட்டிட்டு வர சொன்னாரு. சரின்னு சொன்னேன். எவ்ளோ கொண்டு வந்திருக்கிங்கன்னு கேட்டாரு. நான் Rs.1650 ன்னு சொன்னேன். (அவ்ளோ தான் என்கிட்ட அப்போ வீட்ல கொடுத்து விட்டாங்க). அவரு " இது கட்டுற பணம், மேல எவ்வளவு கொண்டு வந்து இருக்கிங்கனு" கேட்டாரு.
நா Rs. 1650 தான் கொண்டு வந்திருக்கேங்க ன்னு சொன்னேன். AE சாமி " லையின் மென் சொல்லி விடலையா உங்ககிட்ட" அப்டீன்னு கேட்டாரு. (அதாவது லஞ்சம் கொண்டு வரச் சொல்லி லையின் மென் சொல்லலையா அப்டீன்னு அர்த்தமுங்க).
நான், " தனி சர்வீசு வாங்க இங்க கட்ற பணம் எவ்வளவுங்கன்னு கேட்டேன், அவரு Rs. 1650 தான், மீட்டர் போர்டு கொண்டு வர ஈரோடு போகணும், அதுக்கு போக்குவரத்து, இதர செலவு என்று மொத்தம் Rs .௨௦௦௦ ஆகும் அப்டீன்னாரு. எல்லாருமே Rs .2000 தான் கட்றாங்க அப்டீன்னு வேற சொன்னாரு (எல்லார்டையும் லஞ்சம் வாங்கறாங்க)
(நம்மளுக்கு தான் கொம்பு வந்திருக்குல்ல, பெரியவங்க, பெரிய ஆபீசருங்க சொன்னா கேள்வி மேல கேள்வி கேட்போமே) . நானும் " இல்லீங்க சார் போக்குவரத்து, இதர செலவுக்கு எல்லாம் கவுருமென்டு கொடுக்காதா" ன்னு கேட்டேன், இது தாங்க கேட்டேன். AE அய்யாவுக்கு கோவம் வந்திருச்சு போல... "இங்க பாருங்க உங்களுக்கு இஷ்டமிருந்த Rs .2000 கட்டுங்க இல்லாட்டி Rs. 1650 மட்டும் கட்டுங்க, ரூல்ஸ் எல்லாம் பேச வேண்டாம்னு சொன்னாரு . (சத்யமா எனக்கு எந்த ரூல்ஸ்மே தெரியாது, புரியலன்னு கேள்வி தானுங்க கேட்டேன்)
அப்றோம் பில் section ல போயி பணத்த கட்டிட்டு பில்ல பார்த்தேன். அதுல தனியா "சர்வீஸ் சார்செஸ்" ன்னு போட்டு ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கு (அய்யா AE குறித்துக்கொள்ளுங்கள்). என்கிட்டே பணம் Rs. 1650 பதிலாக Rs. 1700 கேட்டாங்க. எதுக்குனு கேட்டதுக்கு Rs .50 கணிப்பொறியில என்னுடைய விவரங்களை ஏற்றுவதற்கு அப்டின்னாக. சரிங்க Rs .50 கும் பில் ல போட்டு கொடுங்க ன்னு கேட்டேன். அவங்க இது பில்ல்லுல வராது அப்டினாங்க. (தேநீர் செலவுக்கோ இருக்குமோ, சரி விடுங்க).
இது இப்டி... சரி எப்போ சரிவீசு கொடுப்பிங்க அப்டீன்னு கேட்டா அதுக்கும் ரெண்டு மாசம் மேல ஆகிடும், ஈரோடு ல இருந்து வரும். அப்டிங்கறாங்க. சரி அதுக்கு இவங்க ஒன்னும் செய்ய முடியாது தான். ரெண்டு மாசம் கழிச்சு வர்றதுக்கு எங்க லஞ்சம்?. காரியம் ஒடனே முடிக்க லஞ்சம் சரி, இதுகெதுக்குங்க எல்லார்டையும் லஞ்சம் வாங்கறிங்க?. (சரி என்னமோ போங்க).
அந்த அருமையான மின்சார அலுவலகம் அமைந்துள்ள இடம் ஈரோடு மாவட்டம் , பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோவில். விசாரிச்சதில கஞ்சிகோவில் மின்சார அலுவலகத்தைப் பொறுத்த வரை லஞ்சம் கொடுத்தா தான் வேலை நடக்கும்ன்னு சொல்றாங்க.
இன்ன வரைக்கும் சர்வீசு தரலிங்க (இதற்கு நான் கஞ்சிகோவில் அலுவலகத்தை குறை சொல்லவில்லை). ஒழுங்கா கரண்டும் வரதில்லிங்க, இனி கரண்டு பில்லுக்கே தனியா ஊட்டுக்கு ரெண்டு பேரு சம்பாதிக்க வேண்டி வரும் போல, இதுல ஏங்க அப்றோம் லஞ்சம் வாங்கி வெறுப்ப ஏத்துரிங்க?
சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கவனிப்பீர்களா ?!!!. ஆதங்கம் மற்றும் மிகுந்த வருத்தங்களுடன் நான். (அசுக்கு புசுக்கு பெயர் சொல்ல மாட்டேன்)

கொங்கு தமிழ்ல பிச்சு உதர்றீங்க போங்க... போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி Preview ல spelling check பண்ணிக்கோங்க. நிறைய mistakes இருக்கு. இன்ட்லி, யூடான்ஸ், தமிழ்மணத்துல இணைச்சுக்கோங்க. நிறைய பேரை சென்றடையட்டும் உங்கள் பதிவு. comment check பண்ண code verification அ முதல்ல தூக்குங்க.
ReplyDeleteசாதாரணமானவள் // நன்றி சகோதரி. பிழையை திருத்திக் கொள்கிறேன் அடுத்த பதிவில்:)
ReplyDeleteவழி காட்டுதலுக்கு நன்றி